பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜன., 2023

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை (05.01.2023) விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் 13ஆம் திருத்தச் சட்டம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.