பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2023

சௌதி அரேபியாவில் முதல் போட்டியிலேயே மெஸ்ஸியுடன் மோதும் ரொனால்டோ

www.pungudutivuswiss.com
கால்பந்து ஜாம்பவன்களான லியோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ 
ரொனால்டோவும் கால்பந்து களத்தில் நேரடியாகச் சந்திக்க வாய்ப்பு
 ஏற்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் இந்தப் போட்டி நடைபெற 
இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோனல் மெஸ்ஸி தற்போது பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனப்படும பிஎஸ்ஜி அணியில் இடம்பெற்றிருக்கிறார். அதேபோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சௌதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவ்விரு அணிகளும் வரும் 19-ஆம் தேதி சௌதி அரேபிய தலைநர் ரியாத்தில் நடைபெறும் நட்பு ஆட்டத்தில் மோதிக் கொள்ள இருக்கின்றன. மன்னர் பஹத் அரங்கில் இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது.

அரை நூற்றாண்டு பழமையான, பிரான்ஸின் மிகவும் பணக்கார கிளப்பான பிஎஸ்ஜியை 2011-ஆண்டில் கத்தார் விலைக்கு வாங்கியது. உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி இந்த அணியில் ஆடுவதற்கான பயிற்சியை கடந்த வாரம் தொடங்கிவிட்டார்.