அரசியல் கைதியாக இருந்த மருத்துவர் சிவரூபனை விடுவித்தது நீதிமன்றம்!
www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது
குறித்த வழக்கு விசாரணை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றிரு்நத நிலையில் அவர் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய இன்று காலை 9.00 மணிக்கு அவர் விடுதலையாவார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன