பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2023

திரையுலகை அதிர வைக்கும் தொடர்ச்சியான மரணம். பிரபல இயக்குநர் மரணம்

www.pungudutivuswiss.com
பிரபல்ய திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் தனது 68 வயதில் இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரால் அறிவக்கப்பட்டுள்ளது, இவர் 
உடல் நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடிரென உயிரிழந்துள்ளார். இவரது இழப்பினை ஈடு செய்ய முடியாது எனத் திரையுலகினர் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் சினிமாவில் பிரபல்ய இயக்குநர்களான கே.பாலச்சந்தர், விசு மற்றும் ராம நாராயணன் ஆகியோரிடம் 60 க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் உதவி இயக்குநராகக் கடமையாற்றி உள்ளதுடன் எங்க ஊர் காவல் காரன், மிடில கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் போன்ற பல வெற்றிப் படங்களைக் தயாரித்துள்ளதுடன், 40 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் பயணித்த இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.