பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2023

சஜித் அணியிலிருந்து 17 எம்.பிக்கள் அரசாங்கத்தோடு இணைவதற்கு முயற்சி

www.pungudutivuswiss.com
ஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் 
அங்கம் வகிக்கும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க
 தலைமையிலான அரசாங்கத்துடன் இணைவதற்குப் பச்சைக்கொடி 
காட்டியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சஜித் அணியிலிருந்து 17 எம்.பிக்கள் அரசாங்கத்தோடு இணைவதற்கு முயற்சி | 17 Mps Joining To Government

எதிரணியில் இருந்து அரசாங்கம் பக்கம் தாவும் எம்.பிக்கள்

எதிரணியில் இருந்து அரசாங்கம் பக்கம் தாவும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார்கள் என்றும் தெரியவருகின்றது.

அவர்களுள் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அடங்குகின்றனர் என்றும் அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.