பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2023

4 மணிநேரத்தில் இந்தியா செல்லலாம்! - 50 டொலர் / 15 000 Rs கட்டணம்.

www.pungudutivuswiss.com


புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்

ஒரு வழிப் பயணத்துக்காக பயணி ஒருவரிடம் இருந்து 50 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக அறவிடப்படும் என்றும் 100 கிலோ கிராம் நிறையுடைய பொதி அனுமதிக்கப்படும் என்றும் படகு சேவை பங்குதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சருக்கும் புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுக்கும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு துறைமுகங்களுக்கும் இடையிலான பயண நேரம் 4 மணி நேரம் என்றும் ஒரு படகில் 150 பயணிகள் பயணிக்க முடியும் என்றும் பகல் நேரத்தில் மட்டும் நேவையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது