பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2023

குருந்தூர் மலை குறித்த நீதிமன்ற கட்டளை மீறப்பட்டுள்ளதா? - விளக்கமளிக்க உத்தரவு.

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு - குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு - குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டுள்ளார்

குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் நேற்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்டது.

குறிப்பாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூகஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் வழக்கிலக்கம் AR/673/18 இன் ஊடாக நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்து, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி தொடர்ந்தும் சட்டவிரோமாக பௌத்த விஹாரை கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக முறையீடு செய்யப்பட்டது. இதன்போதே நீதிபதியால் மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டது.