பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2023

19ஆம் திகதி அரச எதிர்ப்பு பேரணிகள் ஆரம்பம்- 21ஆம் திகதி கொழும்பு முற்றுகை!

www.pungudutivuswiss.com


அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் 19 ஆம் திகதி மாபெரும் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார அறிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் 19 ஆம் திகதி மாபெரும் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார அறிவித்துள்ளார்


அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக நாட்டின் மிக முக்கியமான 5 இடங்களில் போரணி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் இந்த போரணி எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டையே ஆட்டிப்படைக்கும் வகையில் பல உண்மைகள் வெளியாகும் எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இனவாத நடவடிக்கைகள் என்பவற்றின் பின்னணி தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகும் என்று ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்திருந்தார்.

எதிர்கட்சி என்ற வகையில் தாம் பலமாகவுள்ளதாகவும் 21ம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கவுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.