ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்றே அரசிதழில் வெளியிடப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
www.pungudutivuswiss.com
ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்றே அரசிதழில் வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார். ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றியதன் நல்விளைவாக, சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த செய்தி வந்துள்ளது என முதல்வர் கூறினார்.