பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2023

உகண்டாவில் உள்ள ராஜபக்ஷர்களின் பணத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்! - ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை.

www.pungudutivuswiss.com


ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்

இதற்கு, அனுரகுமார திஸாநாயக்கவின் அல்லது சஜித் பிரேமதாஸவின் அரசாங்கம் வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு பணத்தைக் கொண்டு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துக்கு பின்னால் சென்று அரச நிறுவனங்களை விற்பனை செய்யத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்