பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2023

யாழ்.மாநகர சபை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனி நபர்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக நபர் ஒருவர் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும். இதனை மாநகரசபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

தனக்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் வரும் காலத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.   

குறித்த நபருடன் யாழ்மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்தபோதும் குறித்த நபர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.