பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2023

நிறைமாத கர்ப்பிணியான மனைவியை சுட்ட கணவன்!

www.pungudutivuswiss.com

குடும்ப தகறாறு முற்றி மனைவி மீது கணவன் துப்பாக்கியால் சுட்டதில், மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி  அக்கரையான் பிரதேசத்தில் நேற்றைய தினம்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தகறாறு காரணமாக கணவன் - மனைவி இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு முற்றியதில் கணவன், மனைவி மீது இடியன் துப்பாக்கி மூலம் வெடி வைத்துள்ளார்.

இதன் போது கால்பகுதியில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மனைவி நிறை மாத கர்ப்பிணி எனவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அக்கரையான் பொலிசார் தெரிவிக்கின்றனர்.