பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2023

கொழும்புக்கு மேற்கே புவியோட்டில் பாரிய விரிசல்!

www.pungudutivuswiss.com

கொழும்பிற்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் புவியோட்டில் பாரிய விரிசல்கள் காணப்படுவதாகவும், இதற்கும் மேல் மாகாணத்தை பாதிக்கும் நிலநடுக்கங்களுக்கும் இடையேதொடர்புள்ளதா என்பது தொடர்பில் முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, நில அதிர்வுகளுக்கான பிரதான காரணம் என்னவென்பதை கண்டறிய வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

கொழும்பை சுற்றி நில அதிர்வு அளவிகளை பொருத்தி அதன் மூலம் பெறப்படும் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நில அதிர்வுக்கான முக்கிய காரணங்களை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.

1615ஆம் ஆண்டு முதல் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கொழும்பின் மேற்குப் பகுதியில் நில அதிர்வுகள் ஏற்படக் கூடும் எனவும், அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பை அண்மித்த பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் சேதம் பாரியளவில் இருக்கலாம் எனவும் எனவே விசேட கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.