முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்
www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குளத்திற்கு நீராடச் சென்ற போதே, இந்த அனர்த்தம் நேரிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 மற்றும் 16 வயதான சகோதரர்களே உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்ப்பாணம் நகரில் இருந்து மரணவீட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள் என தெரியவருகிறது. சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்