பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2023

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்-சம்பந்தன்

www.pungudutivuswiss.com
மணிப்பூரில் நடந்து வரும் தொடர் கலவரத்தால் 28 சர்ச்சுகள் தாக்கப்பட்டதோடு,
 3 சர்ச்சுகள் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் மெய்ட்டி இன பிரிவினருக்கு எஸ்டி இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு, எதிராக மாநிலம் முழுவதும் வாழும் குகி மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெறுவதால், அம்மாநிலம் முழுவதும் கலவர பூமியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து மதத்தினர்களான மெய்ட்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், தங்கள் நிலங்கள் பறிபோகும் என கிருத்துவ மதத்தினரான குகி மலை வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக இரு பிரிவினருக்கு இடையே கடுமையான சண்டை நடைபெறுகிறது. இதில் மெய்ட்டி பிரிவினர் குகி மக்களின் சர்ச்சுகளை எரித்துள்ளனர்.

அவர்கள் மணிப்பூரின் மலைப்பகுதியில் கட்டப்பட்ட 3 சர்ச்சுகளை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் 28க்கும் மேற்பட்ட சர்ச்சுகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில்  இந்திய ராணுவம் அம்மாநிலத்தில் இறங்கி கலவரத்தை கட்டுப்படுத்த போராடி வருகிறது.