பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2023

கொழும்பில் உணவகங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

www.pungudutivuswiss.com

கொழும்பு புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில்
 செயற்பட்ட உணவகங்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓல்கோட் மாவத்தையில் செயற்பட்ட 5 உணவகங்களை மூடுமாறு மாளிகாந்தை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மிகவும் அசுத்தமான நிலையில், சுகாதார சீர்கேடுகளுடன் உணவகங்கள் செயற்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகள்
கொழும்பில் உணவகங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Colombo Pettah Hotels Colombo Orders

கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி விசேட மருத்துவ நிபுணர் ருவான் விஜேமுனியின் ஆலோசனைக்கு அமைய புறக்கோட்டையில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.


பரிசோதனையின் பின்னர் அது குறித்து மாளிகாந்தை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது