பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2023

நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள்

www.pungudutivuswiss.com


நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 7 ரூபாயினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 333 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 10 ரூபாயினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 15 ரூபாயினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலையாக 310 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 330 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் மண்ணெண்ணெய் விலையில்‌ மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது