பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2023

கனேடிய மாகாணமொன்றில் இந்த பகுதிகள் தனி நகரங்களாக அறிவிப்பு?

www.pungudutivuswiss.com

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளது. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாக மாகாண நகராட்சி விவகார அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளது. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாக மாகாண நகராட்சி விவகார அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் தெரிவித்துள்ளார்

பீல் பிராந்தியத்தினை கலைப்பதன் மூலம் இவ்வாறு புதிய இரண்டு நகரங்கள் உருவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனினும் கலெடெனின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பீல் பிராந்தியத்திலிருந்து விலகி தனித்து இயங்க அனுமதிக்குமாறு மிஸ்ஸிசாகா மேயர் போனி க்ரோம்பே நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றார்.

இந்த நிலையில், மிஸ்ஸிசாகா மற்றும் பிரம்டன் ஆகியன தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.