பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2023

15ஆம் திகதி முதல் வீடுகளுக்கு கடவுச்சீட்டு அனுப்பும் நடைமுறை அமுல்!

www.pungudutivuswiss.com


கடவுச்சீட்டுகளை ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டுகளை ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது

இந்த முறையின் கீழ் கடவுச்சீட்டுகளை மூன்று நாட்களுக்குள் வீடுகளுக்கே தருவித்துக் கொள்ள முடியும் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான பணத்தையும் ஒன்லைன் மூலமே செலுத்த முடியுமெனவும், கைவிரல் அடையாளத்தை அருகிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் வழங்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.