பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2023

மே மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்தது 480 மில்லியன் டொலர்!

www.pungudutivuswiss.com



கடந்த மே மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தொகையின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தொகையின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

கடந்த வருடம் மே மாதம் வரையான காலப்பகுதியினுள் மொத்த வெளிநாட்டு பணவனுப்பல் 1.335 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

எனினும், இந்த ஆண்டில் மே மாதம் வரையில் வெளிநாட்டு தொழிலாளர்களால் 2.347 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை அடைவதற்கு மேலும் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாதாந்தம் பணம் அனுப்பப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையை உயர் திறன் ஏற்றுமதி மையமாக மாற்றும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்