பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2023

நெடுந்தீவுக் கொலைகள் - மூவரின் சாட்சியங்கள் பதிவு!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன

இந்த நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார். அதுவரை வழக்கும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவில் 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 101 வயது மூதாட்டியும் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.