பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2023

ஊர்காவற்றுறையில் மாணவியை தாக்கியதாக பாடசாலை அதிபர் கைது!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த  பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று  கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்

மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், மாணவி தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினாவிய போது, தாம் அதிபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நாளை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் அதிபரை முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.