பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூலை, 2023

யாழ்ப்பாணத்தில் உருவெடுத்த மத துவேசம் - மாணவர்கள் வீதிக்கிறங்கி பெரும் குழப்பம்

www.pungudutivuswiss.com 

பெருமளவான மாணவர்கள் திரண்டு போராட்டம் மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

குறித்த மாணவர் போரட்டத்தின் போது காவல்துறையினர் பிரசன்னமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிய அதிபருக்கு சார்பான சில ஆசிரியர்கள் மாணவர்களை மிரட்டியதாகவும் அவர்களை பலாத்காரமாக உள் அனுப்ப முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வேலணை மத்திய கல்லூரியின் பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (25) காலை ஒன்று கூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

அதிபர் நியமனம்

யாழ்ப்பாணத்தில் உருவெடுத்த மத துவேசம் - மாணவர்கள் வீதிக்கிறங்கி பெரும் குழப்பம் (காணொளி) | Jaffna Protest Againist To Appoint New Principal

வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பழைய மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை (17) போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் வேற்று மதத்தை சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.