பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூலை, 2023

பிரான்ஸ் ஜனாதிபதி சுவிட்சர்லாந்துக்கு விஜயம் July 18, 2023

www.pungudutivuswiss.com
பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் அவர் சுவிட்சர்லாந்திற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் சிறு சிறு முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்டு வந்த நிலைமையில் இந்த விஜயம் அமையப்பெறுகின்றது.
குறிப்பாக அரசாங்கம் F35 தாக்குதல் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்தமை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது.
பிரான்ஸ் ஜனாதிபதியின் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.