பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூலை, 2023

சுவிட்சர்லாந்தில் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை July 19, 2023

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் கடுமையான வெப்பநிலையை தொடர்பில் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் நாட்டின் அனேக பகுதிகளில் கூடுதலாக வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 30 பாகை செல்சியஸ்சை விடவும் அதிக அளவில் வெப்பநிலையை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமையின் பின்னர் வெப்பநிலை குறைவடையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இதை விடவும் அதிக அளவில் வெப்ப நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இத்தாலியில் மிக அதிகமான வெப்பநிலை நீடித்து வரும் நிலையில், மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.