பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2023

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! - 18 வயது இளைஞன் கைது

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்  18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 சிறுமியை காதலித்துவந்த 18 வயது இளைஞன் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து வாகரை பொலிஸாரால் குறிப்பிட்ட இளைஞனை கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை சனிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.