பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2023

கஜேந்திரகுமாரின் இல்லத்துக்கு முன் 300 பொலிசார், இராணுவத்தினர் குவிப்பு!

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இன்று இரண்டாவது நாளாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இன்று இரண்டாவது நாளாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றையதினமும் அவரது வீட்டின் முன்பாக 300 க்கு மேற்பட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினமும் கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகிய நிலையில் அப்பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது