பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2023

சரத் வீரசேகரவுக்கு சவால் விட்ட சட்டத்தரணிகள்!

www.pungudutivuswiss.com

தைரியம் இருந்தால் பாராளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

தைரியம் இருந்தால் பாராளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நீதி துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் நீதிபதிகளை சுதந்திரமாக செயற்படவிடுங்கள் என பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.