பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2023

யாழ். தீவகப் பகுதிகளை தனிமைப்படுத்தி கைப்பற்ற சதி

www.pungudutivuswiss.com

யாழ். தீவகப் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன் நிர்வாகத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் புதிய அதிகார சபையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ். தீவகப் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன் நிர்வாகத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் புதிய அதிகார சபையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது

மகாவலி அபிவிருத்தி திட்டத்தையும் விட மிகவும் மோசமான வகையில் தமிழர்களின் தலைவிதியை முற்றிலும் மாற்றும் இந்த நடவடிக்கைக்கு தமிழ் தேசியம் பேசுவோரும் துணை போகின்றனர் என முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மற்றுமொரு சந்திப்பிற்கு சிறிலங்கா ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியலமைப்பிலுள்ள விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களுக்கு அழைப்பது வடக்கு கிழக்கு ஈழத் தமிழர்களை முட்டாள்கள் ஆக்கும் நடவடிக்கை என சாடியுள்ளார்