பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2023

யாழ்ப்பாணத்தில் சிதைந்த நிலையில் சிசுவின் சடலம்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்.

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் யாழ் போதான வைத்தியசாலை சட்ட வைத்தியஅதிகாரியும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் கோம்பயன் மயானத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் குழி ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த குழி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இறந்த சிசுக்களை அடக்கம் செய்யும் பகுதியாக காணப்படுகின்ற நிலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது குறித்த குழியில் சடலங்கள் போடப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.