பக்கங்கள்

பக்கங்கள்

6 ஆக., 2023

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில்!

www.pungudutivuswiss.com


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளன. தற்போது எதிர்க்கட்சியில் சுயேச்சையாக செயற்படும் உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோரும் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமைக்காக, சுகாதார அமைச்சர் என்ற வகையில் கெஹெலிய ரம்புக்வெல்ல பொறுப்புக்கூற வேண்டியவர் என்று குறி;ப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பின் 28 வது பிரிவின்படி அமைச்சர் தமது அடிப்படைக் கடமைகளை புறக்கணித்துள்ளார் எனவும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரேரணையை விவாதிப்பதற்கான திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.