பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2023

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 15 கிலோ தங்கம் சிக்கியது!

www.pungudutivuswiss.com

இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச்  செல்லப்பட்ட 14.8 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப் பட்டுள்ளதாக சுங்கத்துரை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் புதன்கிழமை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன் போது இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 14.8 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இரு சக்கர வாகனத்தில் தங்கம் கொண்டு வந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.