பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2023

சனல் 4 வெளியிடும் ஆதாரங்கள் - விசாரணை நடத்த அமைச்சரவை முடிவு!

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல்-4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தினோம். இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் தேவையாயின் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது. ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் தான் இவ்வாறான காணொளிகள் வெளியாகுகின்றன.

கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அவ்வாறாயின் அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போது குறிப்பிட்டார்.

மறுபுறம் ஒருதரப்பினர் அழுதுகொண்டு ஒரு தரப்புக்கு சார்பாக செயற்பட்டார்கள். ஆகவே இவர்கள் அனைவரும் கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக செயற்பட்டவர்களாக கருத வேண்டும் என்றார்.