பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2023

அனைத்து இலங்கையர்களும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி!

www.pungudutivuswiss.com




சனல் 4 வெளியிட்டுள்ள  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின்  மகள் அகிம்சா  விக்கிரமதுங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல் 4 இன் வீடியோவை பார்த்த பின்னர் ஏற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. பலவருடங்களாக இந்த தாக்குதலிற்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தொடர்பிருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.

இது அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான காணொளியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.