முல்லைத்தீவு – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இந்த நிலையில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாலும் மன உளைச்சலினாலும் பதவி விலகுவதாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு நீதிபதி சரவணராஜா கடந்த 23ஆம் திகதி கடிதம் மூலம் அறிவித்துள்ளார். |