பக்கங்கள்

பக்கங்கள்

11 அக்., 2023

விசேட விமானத்தில் கொழும்பு வந்தார் ஜெய்சங்கர்

www.pungudutivuswiss.com


இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை, வந்தடைந்தார்.             அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை, வந்தடைந்தார். அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளன

புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான IFC-31 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 05.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகைதந்து இந்தக் குழுவை வரவேற்று அழைத்துச் சென்றது.