பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2023

முன்னாள் இராணுவ கொமாண்டோ அதிரடிப்படையினரால் சுட்டுக்கொலை

www.pungudutivuswiss.com


தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஹங்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஹங்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்

குறித்த சந்தேக நபர் இராணுவத்தின் முன்னாள் கொமாண்டோ அதிகாரியென விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி தலங்கம பகுதியில் உள்ள ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில் 44 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை விசேட அதிரடிப்படையினர் எடுத்த போது , சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, விசேட அதிரடிப்படையினரும் குறித்த சந்தேகநபர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டதில் உயிரிந்துள்ளார்