பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2023

முறிகண்டி விபத்தில் தந்தை பலி- மகன் படுகாயம்!

www.pungudutivuswiss.com




முல்லைத்தீவு, முறிகண்டி- செல்புரம் பகுதியில் A9 வீதியில்  நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு, முறிகண்டி- செல்புரம் பகுதியில் A9 வீதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்

அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிசாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாங்குளம் தலைமைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.