பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2023

மாண்புசால் உயரிய நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம்

www.pungudutivuswiss.com

 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஆண்டுதோறும் மாண்புமிக்க உயரிய நான்கு விருதுகள் குறித்து மீண்டும் தங்களுக்கு இத்தால்அறியத் தருகின்றோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஆண்டுதோறும் மாண்புமிக்க உயரிய நான்கு விருதுகள் குறித்து மீண்டும் தங்களுக்கு இத்தால்அறியத் தருகின்றோம்.

1. தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு விருது

2. மாமனிதர், துணைவேந்தர் அழகையா துரைராஜா நினைவு விருது.

3. உலகப் பெருமனிதர் நெல்சன் மண்டேலா நினைவு விருது.

4. தமிழ்த் தேசிய இளம் தலைமைத்துவ முன்னோடி

இந்த விருதுகளுக்கு உரிய முன்மொழிவுகளும் பரிந்துரைகளும், விண்ணப்பங்களும் உலகளாவிய நிலையில் தமிழ் மக்களிடமிருந்துஎதிர்பார்க்கப்படுகிறன. பொருத்தமான தனிநபருக்கு அல்லதுஅமைப்பிற்கு இவ் விருதுகளை நீங்கள் பரிந்துரைக்கலாம்.

விருதுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரினால்நியமிக்கப்பட்ட பெருமக்கள் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

1. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு விருது

தமிழ் தேசியத்தின் தந்தை என்ற பொருள்பட ‘தந்தை’ செல்வா எனதமிழீழ மக்களால் அழைக்கப்பட்ட அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்அவர்கள் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது. அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் அரசியல் வரலாறு, தமிழீழ மக்களின்சுதந்திரத்திற்காக அவரது வீரம் செறிந்த அர்ப்பணிப்பு மற்றும்அகிம்சை வழியில் தமிழர் தாயத்தில் சுயாட்சியுடனான தமிழரசு அமையபாடுபட்ட அவரது தூரநோக்கு என்பவற்றை நினைவுறுத்தும் வகையில்நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் இவ்விருது வழங்கப்படுகிறது.

இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ அறவழி அரசியல் ஈடுபாட்டுடனான பங்கேற்பு கள் இன்னும் முதன்மையானஆய்வு நெறியாள்கை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் வரைந்துள்ள மற்றும் சர்வதேச மன்றுகள், நிறுவனங்கள், அரசாங்கங்கள், ராஜதந்திரிகள்போன்றவைக்கு அடிப்படை உரிமைகள், தன்னாட்சி, சுயாட்சி போன்றவிடயங்களில் உறுதியான ஆலோசனை தரும் வல்லமை பொருந்திய தனிநபருக்கு அல்லது அமைப்பிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

2. மாமனிதர், துணைவேந்தர் அழகையா துரைராஜா நினைவு விருது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகபணியாற்றியவரும், விஞ்ஞானம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியதுறைகளில் பெரும் புலமை கொண்டிருந்தவரும், 1994ம் ஆண்டுதேசியத் தலைவரால் ‘மாமனிதர்’ பட்டம் வழங்கப்பட்டவருமானபேராசிரியர் அழகையா துரைராஜா அவர்கள் சுயாட்சி, நாட்டுருவாக்கம்ஆகியன ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்ற கருத்துநிலையை உறுதிப்படுத்தப் பாடுபட்டவராவர்.

பேராசிரியர் அழகையா துரைராஜா நினைவு விருதானது தமிழ் மக்கள்செறிந்து வாழும் புலம் பெயர் நாடுகளில் தாம் சார்ந்திருக்கும்துறைக்கு அளப்பரிய தகுதி வாய்ந்த பங்களிப்புகனை நல்கி, புத்தாக்கஅணுகுமுறையுடன் கூடிய ஆய்வுகள், கண்டுபிடிப்புக்கள்என்பனவற்றுடன் விஞ்ஞானம், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், வர்த்தகம், தொழில்துறை, நீதிபரிபாலனம் ஆகியதுறைகளில் அறிவாக்கமும், அறிவுப் பரிமாற்றமும் தரும் வல்லமைகொண்ட தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படடுகிறது.

3. அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது.

அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது உலகளாவிய நிலையில்அமைதிக்கும் சமாதானத்திற்கும் பாடுபடுவதுடன், போரால்பாதிக்கப்பட்டவர்கள், அகதிகள், நாடற்றவர்கள், சித்திரவதைக்குஉள்ளாக்கப்பட்டு பாதிப்படைந்தவர்கள், இன, தேசிய ரீதியாகசிறுபான்மையினர் ஆகியோருக்காகப் பணியாற்றி அடிபடை மனித உரிமைகளை உறுதி யுடன் நிலைநாட்டும் முயற்சிகளில் வலிமையுடன் ஈடுபடும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்குவழங்கப்படும்.

4. தமிழ்த் தேசிய இளம் தலைமைத்துவ முன்னோடி

இப் தலைமைத்துவ முன்னோடி விருதிற்கு 18 வயதிலிருந்து 35 வயதுவரையானோர் விண்ணப்பிக்க முடியும். தலைமைத்துவ விருது பெறத்தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ் இளைஞராகவும்; மனித உரிமை, பொருளாதார, சமூக நீதி நெறிகளை கைக்கொண்டு இயங்குபவராகவும்; தலைமைத்துவ ஆற்றல், புத்தாக்கம், நேர்மைகொண்டவராயும் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்டதகைமைகளை விண்ணப்பதாரர் தாமாகவே கொண்டவராகஇருக்கலாம் அல்லது வேறொரு தேசிய அல்லது சர்வதேசநிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதால் கொண்டிருப்பதும் ஏற்கத்தக்கது.

மேற்கூறப்பட்ட நான்கு விருதுகளுக்கும் தங்கள் அனுபவத்தில்தாங்கள் கண்டுவரும் பொருத்தமான தனிநபர் அல்லது அமைப்பினை அக்டோபர் 31 க்கு முன்பாக பரிந்துரைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு : awards@tgte.org