பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2023

முன்னாள் பிரதி சபாநாயகரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!

www.pungudutivuswiss.com



முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு சொந்தமான வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு சொந்தமான வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

புத்தல விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளினால் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா தயாரிப்பிலான இரண்டு துப்பாக்கிகள், இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்ட பல தடைச் செய்யப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி சபாநாயகர் தற்போது அந்த வீட்டில் வசிக்கவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் அந்த வீட்டின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.