பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2023

இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய மனித சங்கிலிப் போராட்டம்

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் இருந்து இன்று யாழ். நகர் வரையில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் இருந்து இன்று யாழ். நகர் வரையில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது

இந்த போராட்டத்திற்கு வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ் வணிகர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

அதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி யாழின் முக்கிய பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழ் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை, மாநகர சபை உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து போராட்டத்திற்கான ஆதரவை திரட்டியமை குறிப்பிடத்தக்கது.