பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2023

பயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து இருவரை நீக்கியது பாதுகாப்பு அமைச்சு!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

‘ரமேஷ்’ என்றழைக்கப்படும் நிக்லப்பிள்ளை அன்டனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோரின் பெயர்களே கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

இதேவேளை, ‘ரமேஷ்’ மீது இன்டர்போலும் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக இருவரும் 2014 முதல் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.