பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2023

சுவிட்சர்லாந்து 25 பீரங்கிகளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்து அரசாங்கம் 25 பீரங்கிகளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் இதற்கு அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பீரங்கிகளை உக்கிரேனுக்கு மீள் ஏற்றுமதி செய்யப் போவதில்லை என ஜெர்மன் வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த உறுதிமொழியின் அடிப்படையில் பீரங்கிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
சுவிட்சர்லாந்தின் நடுநிலை கொள்கைகளின் அடிப்படையில் போர் இடம்பெறும் நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுவிஸ் இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு ஆயுதங்களை மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு பல்வேறு நாடுகள் சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.