பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2023

சுவிட்சர்லாந்தில் பாரியளவிலாள கஞ்சா தோட்டம்

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட பாரியளவிலான கஞ்சா தோட்டமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முடென்ஸ் பகுதியில் இந்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்திலிருந்து 3500 செடிகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 42 வயதான சுவிஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கஞ்சா செடிகளின் சந்தைப் பெறுமதி சில ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.