பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2023

14 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாளை கலந்துரையாடல்

www.pungudutivuswiss.com

28 ஆண்டு காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளினதும் மனிதாபிமான விடுதலையை வலியுறுத்தி பொதுவெளியூடாக ஜனாதிபதியிடம் அனைவரும் இணைந்து பொது வேண்டுகோளினை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த விசேட கலந்துரையாடலானது குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் நாளையதினம் காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு பொது அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு குரலற்றவர்களுக்கான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் அழைப்பு விடுத்துள்ளார்