பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2023

நாடு முழுவதும் ஒரே நாளில் தேடுதல் - 2121 பேர் கைது

www.pungudutivuswiss.com

நாட்டில் நேற்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 2020 ஆண்களும், 101 பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 2020 ஆண்களும், 101 பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.