பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2023

நைஜீரியாவில் தவறுதலாக நடத்திய தாக்குதலில் 85 பொதுமக்கள் பலி

www.pungudutivuswiss.com

நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமொன்றில் 85 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரிய இராணுவத்தின் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பண்டிகை நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டிருந்தமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் தவறுதலாக இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நைஜீரியாவின் டுடுடன் பிரி என்னும் கிராமத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என நைஜீரிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.