பக்கங்கள்

பக்கங்கள்

14 டிச., 2023

சுவிஸில் வெளிநாட்டவர்கள் கூடுதல் தகமைகளை கொண்டுள்ளனர்

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் பணிகளில் ஈடுபட்டு வரும் குடியேறிகள் அதிக அளவு தொழிற் தகமைகளை கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தாங்கள் ஆற்றி வரும் தொழில் ஈடுபடுவதற்கான தகுதியை காட்டிலும் கூடுதல் தகுதி கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
ஒப்பீட்டளவில் சுவிட்சர்லாந்து பிரஜைகளை விடவும் தொழிற்சந்தையில் குடியேறிகள் கூடுதல் தொழிற்தகைமைகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்பவியல் சார்ந்த தகமைகள், கல்வித் தகமைகள் அதேபோன்று தொழில் சார் தகைமைகள் என்பனவற்றை அதிகமாக குடியேறிகள் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து புள்ளி விபரவியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில காலங்களாகவே இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு குடியேறும் பிரஜைகள் கூடுதல் தொழில்தகைமையை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.