பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2023

தொப்புள் கொடி உறவுகளே .தோள்  முட்டும் வெள்ளம் 
தோள்  கொடுக்க  ரஜனி, கமல், விஜய் வந்தார்களா ?
----------------------------------------------------------------------------------
உறவுகளே சிந்தியுங்கள் ,. இந்த  பெரிய நடிகர்கள் எல்லாம்  உழுது நீர் இறைத்து  சோற்றுக்குள் நின்று நாற்று நாட்டு  விவசாயம் செய்தா  கோடீஸ்வரர் ஆனார்கள்   உங்கள்  பணத்தில் கோடி கோடியாக சம்பாதித்து கால் மேல் கால் போட்டு  அனுபவிக்கிறார்கள் .நீங்கள் அவர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள் .எத்தனை தலைமுறைக்கும் இருந்து கொண்டே சாப்பிடும் அளவுக்கு சொத்துக்களை  குவித்து வைத்திருக்கிறார்கள்,எப்பொழுதாவது  இப்போது போன்ற பேரிடர்களில்  வெளியில் இரங்கி வந்து  மக்களை  பார்த்தார்களா  என்ன நடக்குது என்று  கவனித்தார்களா  ஒருசாதமாவது  ஈகம் செய்தார்களா நலம் விசாரித்தார்களா  மக்கள் எக்கேடு  ஆவது கேடடா நமக்கென்ன என்று  தங்களை  மாளிகையை விட்டு  எட்டிக்கூட பார்க்கவில்லை 
உறவுகளே சினிமா  என்பது ஒரு பொழுதுபோக்கு . அதனை உங்கள் வாழ்க்கையாக  நினைக்காதீர்கள்,  100  120 கோடி என்று ஒரு படத்துக்கு வாங்கு  நடிகர்கள்  உங்களுக்கு   ஒருசதம் கூட உதவவில்லை . ஏன்  வெளியே வந்து நிலைமையை  கவனிக்க கூட இல்லை ,இவறிகளையா நீங்கள் தலையில்  தூக்கி வைத்து  கொண்டாடுகிறீர்கள் .வேண்டாம் விட்டு விடுங்கள் இனியாவது உங்கள் வாழ்க்கையை  நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் . சினிமாவையும் அரசியலையும்  நம்பி ஏமாறாதீர்கள்  சிந்தியுங்கள்