பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2023

சுவிட்சர்லாந்தில்உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தை .

www.pungudutivuswiss.com


உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக இந்த சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பல நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்குபற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ தெரிவித்துள்ளார்